Nov 9, 2016

முதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி

இன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. 

செல்லாத நோட்டை கொண்டு நகை கடைகளில் மட்டும் எப்படி வியாபாரம் நடந்தது? இன்று நகை கடைகளில் நடந்த வியாபாரம் சட்ட விரோதமானது? இதற்கு மோடி அரசுசின் பதில் என்ன?

1986ம் ஆண்டு சித்தூர் முருகேசன் என்ற இளைஞர் ஆபரேசன் இந்தியா 2000 என்ற திட்டத்தின் மூலம் குரல் கொடுத்தார். இன்று அவர் முதியவராகியிருக்க கூடும். மோடியின் இன்றைய திட்டத்தின் முன்னோடி சித்தூர் முருகேசன் தான். ஆனால் அந்த இளைஞர் சொன்ன திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமல், தன் அரசியல் ஆதாயத்தை மட்டும் கணக்கு போட்டுள்ளார் மோடி.
இன்றைய தருணத்தில் நினைவுகூறக்கூடிய மிக முக்கிய நபர் சித்தூர் முருகேசன். அதே நேரத்தில் இன்றைய தருணத்தில் மோடியின் இந்த திட்டம் எள் அளவும் பலனலிக்காது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் செல்லாத பணத்தில் (அதாவது கருப்பு பணத்தில்) நடந்த இன்றைய நகை வியாபாரம்.


Popular Posts